மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்தியத்தொகுப்புக்கு தமிழக அரசு வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தமாய் புறக்கணிக்கப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பலையையும் உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிய […]
