ஆப்கானிஸ்தானில் திடீரென நடந்த வான்வழி தாக்குதலில் ஐந்து தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் தலீபான்களின் ஆதிக்கம் தற்போது அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க படைகள் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள சயாத் அபாத் பகுதியில் ஒன்று கூடியிருப்பதை அறிந்து அங்கு வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். […]
