தலீபான்களின் செய்தி தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு அவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இஸ்லாமியத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படமாட்டாது. […]
