தலீபான்களின் கைகளில் கோடிகணக்கானோரின் விவரங்கள் நிறைந்த கருவி ஓன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூல் நகரையும் தன்வசப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தலீபான்களின் கைகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க படைகள் தீவிரவாதிகளின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த […]
