ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அனைத்து நேரங்களிலும் துப்பாக்கிகளுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காபூல் நகரில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று அந்நகரிலேயே சலீம் கர்வான் பிரிவில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்துவிட்டது. இதில் தலிபான்களின் கவச வாகனம் சேதமடைந்தது. எனினும், இதனால் உயிரிழப்புகள் […]
