தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் பாகிஸ்தான் எங்களது இரண்டாவது தாயகம் எனவும் அந்நாட்டுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை […]
