வெளிநாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்காத வரை அந்நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலீபான்கள் ஆட்சி வந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும் தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று 1996 முதல் 2001 வரை கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். […]
