Categories
உலக செய்திகள்

பொறுமைக்கும் எல்லை உண்டு…! “சோதிக்காதீங்க”…. தலிபான் அரசை கண்டித்து…. பெண்கள் போராட்டம்….!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் படிப்படியாக பெண்களுக்கு தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு, பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கட்டாயம் நெருங்கிய ஆண் உறவினருடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முகத்தையும், தலையையும் மறைக்கும் ‘ஹிஜாப்’ போன்ற ஆடைகளை அணிந்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர குண்டுவெடிப்பு…. 5 பேர் பலத்த காயம்…. திணறும் அரசு….!!

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் எஸ்.யூ.வி ரக காரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அதில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலிபான் அரசு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

Categories
உலக செய்திகள்

பெண்கள் நடிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாதீங்க..! சேனல்களுக்கு புதிய விதிமுறைகள்… தலிபான்களின் அதிரடி உத்தரவு..!!

தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தலிபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி காபூலை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து பெண் உரிமை ஆர்வலர்கள் தலிபான்கள் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

செல்லுபடியாகுமா பாஸ்போர்ட்டுகள்….? குழப்பத்தில் ஆப்கானியர்கள்…. தலீபான்களின் அதிரடி அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசாங்க ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் குறித்த குழப்பத்திற்கு தீர்வாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின் அந்நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனவும், அரசாங்க கொடியாக தலீபான் கொடியையும் மாற்றினர். இந்நிலையில், ஆப்கானியர்களிடையே முந்தைய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் தற்பொழுது செல்லுபடி ஆகுமா? என்ற கலக்கம் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இக்கலகத்திற்கு தீர்வாக தலீபான் அரசு அறிக்கை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: தலிபான் அரசுடன் நட்பாக செயல்பட தயார்…. சீனா அறிவிப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களாட்சியை அப்புறப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசம் வந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை முறையாக தொடர்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது தலிபான் அரசை ஆதரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தலிபான்களின் நடவடிக்கையை பொருத்து அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற ரஷ்ய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |