ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதனை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போது ஹனுமன்கர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவர் வீட்டில் அருகில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. […]
