மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது என தலாய்லாமாவிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். அவர், பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். சம்பாதித்த பின் உடல் நலனுக்கு செலவிடுகின்றனர். அதனைப்போலவே எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள். இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர் களாகவே இருந்து இறந்து போகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
