நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் […]
