குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி மாணிக்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கிஷ்னேஸ்வரன் என்ற 2 1/2 வயது ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2-ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. […]
