செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி முதலியார் வீதியில் சசிகுமார் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவரை மீட்டு தரவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அந்த […]
