காதலியின் பிறந்த நாளன்று தற்கொலை செய்வதாக கவர்னர், முதல்வருக்கு வாலிபர் மனு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர் லொக்கன ஹள்ளி பகுதியில் உத்தமராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உத்தமராஜா திருப்பூரில் தங்கி வேலை செய்தபோது அங்குள்ள இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தமராஜாவும் அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் உத்தமராஜா சொந்த ஊருக்கு திரும்பிய போது பேஸ்புக், செல்போன் மூலம் அந்த […]
