ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் மூத்த தலீபான் மதகுருவான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார். அப்போது தன்னுடைய செயற்கை காலில் வெடிகுண்டுகளை மறைத்து […]
