12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சதாசிவபுரம் கிழக்கு காட்டு கொட்டகை பகுதியில் மகுடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிநாத்(17) என்ற மகனும், ஷர்மிளா(15) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிநாத் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு கிரிநாத் பள்ளிக்கு சென்றுள்ளார். […]
