உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரியில் உடற்கல்வி பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபக் நேற்று நட்சத்திர ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீபக் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து […]
