இளம்பெண்ணை தற்கொலைக்கு துண்டிய கணவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]
