தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்புவோர் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்துடன் கடை அமைய உள்ள இடத்திற்கான சாலை வசதி, […]
