பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு கள்ளிபுரத்தில் கூலித்தொழிலாளி தீர்த்தன் வசித்து வருகின்றார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதில் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். […]
