திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசிய போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த இரண்டு மாத காலத்தில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 743 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 402 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார். ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலில் 2.38 லட்சம் பக்தர்கள் […]
