தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “டெல்லியில் உள்ள பள்ளிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு உள்ள மாணவர்களின் முன்னெடுப்பை ஊக்குவிக்கும் […]
