குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் வழக்குகள் வருவதால் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் செயல்படும் சில குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் புகார்கள் வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து […]
