பாரத பிரதமர் கிராம சாலை திட்டம் சார்பாக ஊரக சாலைகளை தரமாக அமைப்பது குறித்து கருத்தரங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விஷ்ணு அதிக விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணம் சரிவர சாலைகள் இல்லாதது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய பகுதிகளில்தான் அதிக விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இதற்கு காரணம் சாலைகள் சரிவர போடாதே. எனவே சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும். சாலைகள் போடும் ஒப்பந்ததாரர்கள் தரமானதாக போடுகிறார்களா? […]
