கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]
