தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். இவர் நடிகர் கமலின் அன்பே சிவம், நடிகர் விஜயின் பகவதி, சூர்யாவின் உன்னை நினைத்து மற்றும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் போன்ற 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
