தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். […]
