சசிகலாவை பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை […]
