தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‛யூ டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. […]
