அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை அளந்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கோனாம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்காக ஏராளமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. கிராம […]
