உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாமல் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பழைய குயவர்பாளையம் பச்சரிசி கார தோப்பு பகுதியில் நாகராஜன்(46) என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி லாவண்யா(34). இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(15)என்ற மகளும், அர்ஜுன் (13)என்ற மகனும் உள்ளார்கள். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடுவதற்காக […]
