மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்வு நடைபெற்றது . அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல் துறையினர் ஓடி வந்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கைகளில் வைத்திருந்த பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி தனி இடத்திற்கு அழைத்துச் […]
