மர்ம நபர்கள் தம்பதியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் ராஜகோபால்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நூற்பாலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு குருபாக்கியம்(68) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன்கள் இருவரும் திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
