இந்தியாவில் நெட் பிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5,டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனது பார்வையாளர்களுக்கு அப்போது பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டிவி ஆரம்பித்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தற்போது ஓடிடி தளத்திலும் ராஜ் டிவி கால் பதித்துள்ளது. […]
