தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் கனகராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசாணைகளை தமிழில் வெளியிடுதல், அரேபிய எண் மொழிக்கு பதில் தமிழ் எண் மொழியை பயன்படுத்துதல், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கு அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. […]
