இன்றைய நாள் : மார்ச் 10 கிரிகோரியன் ஆண்டு: 69 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 296 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை. 1735 – உருசியாவின் முதலாம் பவுல் மன்னருக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உருசியப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறின. 1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 1804 – லூசியானா வாங்கல்: லூசியானாவை அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி மிசூரி, செயிண்ட் லூயிசில் நடைபெற்றது. 1814 – பிரான்சில் லாவோன் […]
