நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா […]
