எதிர்பார்ப்புடன் சென்று தான் அவமானப்பட்ட நிகழ்வு குறித்து நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். தனக்கு எட்டு வயது இருக்கும் போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் தான் அவமானப்பட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார் நடிகர் மாதவன். “அந்த கிரிக்கெட் வீரர் வந்துள்ளார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக முந்திக்கொண்டு நண்பருடன் சென்றேன். அவர் யாருடனோ பேசிக் கொண்டே ஒரு 50 பேருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் ஆனால் கையெழுத்து போடும்போது யாருடைய முகத்தையும் நிமிர்ந்து […]
