உத்தரபிரதேசத்திலுள்ள காசி எனும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “காசி தமிழ் சங்கமம்” என்ற ஒருமாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ள இக்கொண்டாட்டம், வடக்கேயுள்ள காசிக்கும், தெற்கே உள்ள நம் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்க்கிற திட்டமாகும். இதற்குரிய ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் (ஐ.ஐ.டி) செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் […]
