தமிழ் கட்சிக்கும், இலங்கை அதிபருக்கும் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முதல் முறையாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி. சுமந்திரன் இந்த பேச்சுவார்த்தை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இனி எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை. […]
