தமிழ் இலக்கியத்தின் வரலாறு பாரதியிடம் இருந்துதான் துவங்குகிறது. அந்நாளைய அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டக்காரருமான ஜி.சுப்ரமணியஐயர் நடத்தி வந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ்செய்தி நாளிதழுமான சுதேச மித்திரனில் 1905ல் உதவி ஆசிரியராக வேலைக்கு அமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம்தான். அந்த நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்று தான். எனினும் பாரதிக்கு விடுதலை என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து […]
