இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. […]
