திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
