தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு சங்கம் திண்டுக்கல் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு யோகா சங்க பொருளாளர் கரிகாலன் தலைமை தாங்கியுள்ளார். பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த போட்டியை தொடங்கி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் போட்டியில் திண்டுக்கல் தேனி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். […]
