தமிழ்நாட்டில் 2022 ஆம் வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90 சதவிகிதம் அதிக அளவில் பெய்திருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இது தொடர்பாக துணைவேந்தர் வே.கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய போது தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சராசரியாக 90% அதிகமாக பெய்து இருக்கிறது. இந்த பருவமழை காலம் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்ற காரணத்தினால் மழை அளவு மேலும் அதிகரிக்கும். மேலும் பல மாவட்டங்களில் சராசரி மழையை […]
