பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தங்களை முழுமனதோடு அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பசுமை சாம்பியன் என்ற விருதை 100 பேருக்கு வழங்க உள்ளது. மேலும் தலா 1 லட்ச ரூபாய் வீதம் பணமுடிப்பு சேர்த்து வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். […]
