தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், “தமிழ்த்துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகளை காணும் நல்வாப்பிற்கு உதவிடும் என்பதோடும் தமிழ் மொழி, பண்பாடு, […]
