பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]
