ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க சார்பில் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் அப்துல் ரஹீம் தலைமை […]
