ஆன்லைன் மூலமாக லைசன்ஸ் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் (போக்குவரத்து) துறை சார்பில் ஏப்ரல் 12 (இன்று) தலைமைச் செயலகத்தில் வைத்து பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் அதனை புதுப்பித்தல், மேலும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் செய்யும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் […]
